பெரியார் எனும் சமூகப் போராளியைக் குறித்து அடுத்து வரக்கூடிய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வண்ணம்.. அவர்களை எளிதில் சென்றடையும் ஊடகமாகிய இணையத்தில்.. பெரியாரின் எழுத்துக்கள்.. பெரியார் மீதான எழுத்துக்கள்.. பெரியாரியல் மீதான விமர்சனங்கள்.. விவாதங்கள்.. அனைத்தையும் ஒரே தளத்தில் கிடைக்க வகை செய்வதே எங்கள் இலக்கு.
இது ஒரு தொடர்ந்த கூட்டு முயற்சியே... அவ்வகையில்.. பெரியார் குறித்த செய்திகள்.. நிகழ்வுகள்.. படங்கள்.. எழுத்துக்கள் இவற்றை வைத்திருப்போர்.. அது எந்த வடிவில் இருந்தாலும்.. தயவு கூர்ந்து அதனை எங்களுக்கு அனுப்பி உதவும்படி வேண்டுகிறோம்.
தளத்தை பற்றிய விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்கும்படி வேண்டுகிறோம்.
உலகெங்கிலும் உள்ள தமிழர்களின்.. பெரியார் அன்பர்களின் ஊக்கத்தையும்.. ஆதரவையும்.. ஒத்துழைப்பையும் நம்பியே இம்மாபெரும் பணியில் இறங்கியுள்ளோம்.